தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 6ஆம் வகுப்பு சிறுமியை கத்தி முனையில் கடத்திய மர்ம நபர்கள்..

0 11958
நாமக்கலில் மாடியில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 6ஆம் வகுப்பு சிறுமி கத்தி முனையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து 6 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கலில் மாடியில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 6ஆம் வகுப்பு சிறுமி கத்தி முனையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து 6 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரவணன் - கௌசல்யா தம்பதியின் மகள் மவுலனிசா, அங்குள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.

லாரி ஒட்டுநரான சரவணன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், கௌசல்யாவும், மவுலனிசாவும் நேற்றிரவு வீட்டுக்குள் புழுக்கமாக இருந்ததால் மாடியில் கட்டில் போட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் கௌசல்யாவின் தம்பி 15 வயதான ஜெய்சன் என்ற சிறுவனும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர், கௌசல்யா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்ட கும்பல், கௌசல்யாவையும், ஜெய்சனையும் கட்டிபோட்டுவிட்டு, சிறுமி மவுலனிசாவை கடத்திச் சென்றதாக சொல்லப்படுகிறது. சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments