தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!

0 2144

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும், நாளையும் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. 3,4,5ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு அதிகபட்சமாக பகல்நேர வெப்பநிலை இயல்பைவிட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக் கூடும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை எனவும், வானம் மேகமூட்டத்துடன் மட்டும் காணப்படும் எனவும் கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments