ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகி மறைவுக்கு ஆறுதல் கூற சென்ற அக்கட்சியின் எம்.எல்.ஏ.வை அடித்து விரட்டிய பொதுமக்கள்.!

0 2148

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகி மறைவுக்கு ஆறுதல் கூற சென்ற அக்கட்சியின் எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் அடித்து விரட்டிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகியும், கோட்டப்பள்ளி கிராம தலைவருமான கஞ்சி பிரசாத் இரண்டு நாட்களுக்கு முன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இவரது மறைவுக்கு அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. தலாரி வெங்கட் ராவ் ஆறுதல் கூறுவதற்காக அவரது வீட்டுக்குச் சென்ற நிலையில், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் நிர்வாகி கொலை சம்பவத்தில் எம்.எல்.ஏ வெங்கட்ராவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவரை தாக்கி அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீலார் கிராம மக்களிடம் இருந்து எம்.எல்.ஏ தலரி வெங்கட்ராவை பாதுகாப்பாக மீட்டு சென்றனர்.

இந்த நிலையில், அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவியதால் அங்கு முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments