நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.252.34 கோடிக்கு மது விற்பனை

0 3089

 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் சுமார் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உழைப்பாளர்கள் தினத்தை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், மதுப்பிரியர்கள் நேற்றைய தினமே மதுபானங்கள் வாங்க டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர்.

இந்த நிலையில் அதிக பட்சமாக மதுரை மண்டலத்தில் 54.89 கோடி ரூபாய்க்கும் சென்னை மண்டலத்தில் 52.28 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல திருச்சி, கோவை, சேலம் ஆகிய மண்டலங்களிலும் அதிகளவில் மது விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments