நாமக்கல்லில்அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் சாலையோரம் நின்றிருந்த முதியவர் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி.!
நாமக்கல்லில், அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த முதியவர் மீது மோதியதில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வெப்படை பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்ற முதியவர், பணி நிமித்தமாக ரங்கனூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.
எலந்தகுட்டை பகுதியில் சாலையை கடப்பதற்காக அவர் சாலையோரத்தில் நின்றிருந்த நிலையில், வெப்படையில் உள்ள நூற்பாலையில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று, பாரம் தாங்கமல் நிலைதடுமாறி முதியவரை இடித்து தள்ளிவிட்டு சாலையில் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த முதியவர் ராமசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த சரக்கு வாகன ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளார். சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments