சத்தீஸ்கரில் வீட்டில் திருட முயன்ற இளைஞரை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டுத் தாக்குதல்.!

0 2558

சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் வீட்டில் திருட முயன்ற இளைஞரைக் கயிற்றால் மரத்தில் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு 5 பேர் சேர்ந்து தாக்கிய வீடியோ வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

முதல் நாளில் திருட வந்த இளைஞனைப் பிடித்துக் காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், அவர்கள் விடுவித்த பின் மறுநாளும் திருட வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் சரியான பாடம் புகட்ட வேண்டும் எனக் கருதிக் காலில் கயிற்றால் கட்டி மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிந்து 4 பேரைக் கைது செய்துள்ளனர்.

 

https://twitter.com/ANI_MP_CG_RJ/status/1520605517403795456

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments