வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102உயர்வு

0 6068

நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 102 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்திற்கேற்ப எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் 102 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 19 கிலோ எடையுள்ள வணிக எரிவாயு சிலிண்டரின் விலை 2ஆயிரத்து 253 ரூபாயில் இருந்து 2ஆயிரத்து355 ரூபாயாக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.அதேசமயம், வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments