மே தின பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

0 2246

சர்வதேச உழைப்பாளர் தினத்தை ஒட்டி, சென்னை சிந்தாதிரிபேட்டையிலுள்ள மே தின நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே தினத்தை ஒட்டி சிவப்பு நிற சட்டை அணிந்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நினைவுச் சின்னத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனிதனை மனிதனே இழுத்த கை ரிக் ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக் ஷாக்களை நடைமுறைப்படுத்தியது உள்ளிட்ட திமுகவின் திட்டங்களை பட்டியலிட்டு பேசியதோடு, தொழிலாளர்களை வாழ வைக்ககூடிய அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.

பின்னர், அங்கு கூடியிருந்த தொழிற்சங்கத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை கொடுத்து உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments