வெடிகுண்டுடன் விமான நிலையம் வந்த தம்பதி... அலறியடித்து ஓடிய சக பயணிகள்... பரபரப்பு வீடியோ!

0 5209

இஸ்ரேலில் வெடிகுண்டுடன் விமான நிலையத்திற்கு வந்த அமெரிக்க தம்பதியை கண்டு சக பயணிகள் அலயறிடித்துக் கொண்டு ஓடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கோலன் பகுதிக்கு சுற்றுலா சென்ற அமெரிக்காவை சேர்ந்த தம்பதி, கீழே கிடந்த ஒரு பொருளை எடுத்து, தங்கள் நாட்டுக்கு  கொண்டு செல்ல முயன்றுள்ளது. விமான நிலையத்திற்கு அப்பொருளை தம்பதி கொண்டு சென்ற நிலையில், பாதுகாப்பு சோதனையில் அது வெடிக்காத குண்டு என கண்டுபிடிக்கப்பட்டது.

இதைக் கண்ட சக பயணிகள் நிலையத்திற்குள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து பல்வேறு கட்ட விசாரணைக்கு பின் தம்பதி வெளியேற அனுமதிக்கப்பட்டனர். தப்பிக்கும் முயற்சியில் கீழே விழுந்து காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments