சென்னை அருகே காரில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தல்... 3 பேர் கைது
சென்னையில், காரில் ரகசிய அறை அமைத்து கடத்திவரப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர்.
வால்டாக்ஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த காரினை மடக்கி சோதனையிட்டனர். முதற்கட்ட விசாரணையில் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை சாலை மார்க்கமாக தமிழகம் கொண்டு வந்து திண்டுக்கலுக்கு ரயில் மூலமாக கொண்டு செல்வது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக. திண்டுக்கல்லைச் சேர்ந்த மோகன் குமார், ஸ்டான்லி மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த சீனி ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன
Comments