"பீனிக்ஸ் கோஸ்ட் தற்கொலை ட்ரோன்"களை உக்ரைனுக்கு வழங்குகிறது அமெரிக்கா

0 1966

ரஷ்யாவை கட்டுப்படுத்த உக்ரைனுக்கு சூசைட் ட்ரோன் என்ற அழைக்கப்படும் நூற்றுக்கணக்கான பீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன்களை அமெரிக்கா வழங்குகிறது.

கிழக்கு உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தம் ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா வழங்கும் ட்ரோன்களை அப்பகுதியில் உக்ரைன் நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த இவேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன் பெயருக்கு ஏற்றார் போல் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது என கூறப்படுகிறது.

உக்ரைனுக்கு 121 ட்ரோன்களை அமெரிக்கா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு பதிப்புக்கு ஏற்ப ட்ரோன் தாக்கி அழிக்கும் தளவாடத்தின் தன்மை மாறுபடும் என்றும் உக்ரைன் வீரர்கள் எளிதில் தூக்கிச் சென்று எந்த இடத்தில் இருந்தும் பயன்படுத்தக் கூடிய வகையில் ட்ரோன் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments