அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம், ஆட்டோ மீது மோதி விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கல்லூரி மாணவன்..!

சென்னை கோயம்பேட்டில் அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
செஞ்சியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தை நோக்கி வந்த அரசு பேருந்து, புறநகர் பேருந்து நிலைய திருப்பத்தில் அதிவேகமாக திரும்பியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதில், இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவன் நிலைதடுமாறி வாகனத்துடன் பேருந்தின் அடியில் விழுந்த நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் உயிர்த்தப்பினார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்து குறித்து பேருந்து ஓட்டுநர் ரமேஷ் பாபுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
Comments