நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் அளித்த பரிசுப்பொருட்கள் எவை? அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

0 2364
நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் அளித்த பரிசுப்பொருட்கள் எவை? அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரன், நடிகை ஜாக்குலின் பெர்னான்டசிற்கு தலா 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 பெர்ஷியன் பூனைகள், மினி கூப்பர் கார் உள்ளிட்டவற்றை பரிசளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சுகேஷ் மீதான 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் ஜாக்குலினின் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

முன்னதாக, ஜாக்குலினுக்கு சுகேஷ், பல விலை உயர்ந்த பொருட்களை பரிசளித்ததாக அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தனர்.

52 லட்ச ரூபாய் மதிப்புள்ள அரேபிய குதிரை, 15 ஜோடி வைர காதணிகள், கூஜி, சேனல் நிறுவன கைப்பைகள், ரோலக்ஸ் கைக்கடிகாரம் உள்ளிட்டவை பரிசளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments