வீட்டு வாசலில் காரை நிறுத்தி அதிக சத்தத்துடன் பாட்டு போட்டதை தட்டிக் கேட்டவரை கத்தியால் தாக்கிய இளைஞர்

0 2563

நாமக்கல் அருகே, வீட்டு வாசலில் காரை நிறுத்தி அதிக சத்தத்துடன் பாட்டு போட்டதை தட்டிக் கேட்டவரை, மதுபோதையில் இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சுல்தான்பேட்டை பகுதியில் வசித்து வரும் பாலச்சந்தர் என்பவரின் மகன் சந்துரு. இவர்களுக்கு சொந்தமான காரை தங்களது வீட்டின் முன் நிறுத்த இடமில்லாததால், அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவரது வீட்டு முன்பு நிறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இரவு நேரங்களில் அந்த காரில் அமர்ந்து மது அருந்துவது, காரில் அதிக சப்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்து நடனமாடுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சம்பவத்தன்றும் இதே போன்று அவர்கள் செய்து வந்த நிலையில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு இடையூறாக இருந்ததால் கோடீஸ்வரன் அவர்களைக் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்துரு, காரில் இருந்த கத்தியை எடுத்து கோடீஸ்வரனை தாக்கியுள்ளார். இதில் கையில் பலத்த காயமடைந்த கோடீஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பரமத்திவேலூர் போலீசார் தலைமறைவான சந்துரு மற்றும் அவனது தந்தையை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments