கடனை திருப்பிக் கேட்டதால் நடிகர் மனைவி செய்த வேலை.. வராகிக்கு கிடைத்த வரம்..!

0 28557

தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகர் சாய் பிரசாத்தின் மனைவி சுஜிதாவிடம், 2 வது திருமணம் செய்யக்கூறி தொல்லை கொடுத்ததாக சினிமா இயக்குனர் வராகி கைது செய்யப்பட்ட நிலையில், சுஜிதா, கடனாக பணம் கேட்டு வராகிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய குரல் பதிவுகள் வெளியாகி உள்ளது...

பிரபல சின்னத்திரை நடிகர் சாய் பிரசாத் , இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்புக்கு பின்னர் சாய்பிரசாத்தின் மனைவி சுஜிதா, விருகம்பாக்கத்தில் உள்ள வராகி என்பவரின் அலுவலகத்தில் வேலைபார்த்து வந்ததாக கூறப்படுகின்றது. சொந்தமாக பத்திரிக்கை நடத்தி வந்த வராகி கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிவா மனசுல புஷ்பா என்ற சர்ச்சைக்குரிய தலைப்பில் அரசியல் படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருக்கும் டைஷா அடுக்குமாடி குடியிருப்யில் வாடகைக்கு வசித்து வரும் சுஜிதாவின் வீட்டுக்கு சென்ற வராகி, தன்னை 2 வது திருமண செய்து கொள்ளுமாறு அவருக்கு தொல்லை கொடுத்த புகாரில் கடந்த 25ஆம் தேதி மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த வராகி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சுஜிதா மீது எதிர்புகார் அளித்தார்.

அதில், கணவரை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த சுஜிதாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் 2016-ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தனது இந்தியன் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிகை அலுவலகத்தில் வேலை கொடுத்ததாகவும், அந்த காலகட்டத்தில் தனக்கிருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் தொடர்பு எண்களை தனக்கு தெரியாமல் எடுத்து அவர் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாகவும் அவரது இந்த நடவடிக்கையால் சுஜிதாவை தான் வேலையை விட்டு நீக்கி விட்டதாகவும் வராகி தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கிடையில் எத்தனையோ முறை தன்னை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ள அவரது பெற்றோரும் சுஜிதாவும் கேட்டும் தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 17-ம் தேதி தனது வாட்ஸ் அப்பில் குரல் பதிவை அனுப்பிய சுஜிதா ஆன்லைன் கந்து வட்டிக் கும்பலிடம் தான் கடன் வாங்கி சிக்கியிருப்பதாகவும், அந்த கும்பல் தனது படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து எனது செல்போனில் உள்ள அனைத்து தொடர்புகளுக்கும் அனுப்பி மிரட்டி வருவதாகவும் எனவே அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க தனக்கு உடனடியாக 2 லட்சம் வேண்டுமென கேட்டதாக தெரிவித்துள்ளார்.

சுஜிதாவின் நிலையை உணர்ந்து தனது கல்லூரி பயிலும் மகளுக்கு கட்டணம் செலுத்துவதற்காக வைத்திருந்த மூன்று லட்ச ரூபாய் பணத்தில் இரண்டு லட்சத்தை இரண்டே நாட்களில் தந்து விடுவதாக கூறியதன் அடிப்படையில் கொடுத்ததாகவும் அந்த பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் அவரது வீட்டிற்கு சென்று காலிங் பெல்லை அழுத்தி பணத்தைக் கேட்க முயன்றதாகவும் ஆனால் அவரது செல்போனையும் எடுக்காமல் வீட்டுக்குள் இருந்து வெளியில் வராமல் தனது கடனை கொடுக்க மறுத்ததாக குற்றம்சாட்டியுள்ள வராகி, தனக்கு கொடுக்க வேண்டிய கடனிலிருந்து தப்பிக்க தன் மீது பொய்யான புகாரைக் கொடுத்து தனக்கிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பழக்கத்தை பயன்படுத்தி தன்னைப் பழி வாங்கி இருப்பதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மறு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

வராகி இதற்கு முன்பு செய்தியாளர்களை அவமதித்த விஜயகாந்த் வீட்டை முற்றுகை இடபோவதாக கூறிய சம்பவத்தில் தே.மு.திகவினரால் தாக்கப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments