திமுக உட்கட்சித் தேர்தலில் இரு பிரிவினரிடையே மோதல்.!

0 2223

நெல்லையில் நடைபெற்ற திமுக உட்கட்சித் தேர்தலில் 2 குழுக்களுக்கு இடையே நடந்த மோதலினால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மத்திய மாவட்ட திமுக உட்கட்சித் தேர்தல் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நெல்லை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மற்றும் மேலப்பாளையம் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு போட்டியிட விரும்புவோரிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

இந்த வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் 2 குழுக்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

பாதுகாப்புக்கு வந்த போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தள்ளிவிட்டதில் தொண்டர் ஒருவர் கீழே விழுந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments