தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவுக்கு ராணுவ வீரர் நன்றி..! உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு!

0 11498

தாலி பறிப்புச்சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு , காஷ்மீரில் இருந்து திருச்சி ராணுவ வீரர் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த பேரூர் குடித்துறை கிராமத்தை சேர்ந்தவர் ராணுவவீரர் நீலமேகம். காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வரும் நிலையில் இவரது மனைவியின் தாலி சங்கிலியை மர்ம ஆசாமி பறித்துச்சென்றுவிட்டதாக வீடியோ மூலம் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து ராணுவ வீரர் நீலமேகத்தை தொடர்பு கொண்டு பேசிய டி,ஜி,பி சைலேந்திரபாபு, நம்பிக்கையுடன் இருங்கள், தாலி சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் உங்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நீலமேகத்தின் மனைவியை நேரில் சந்தித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்து உள்ளார். இதற்கு ராணுவ வீரர் நீலமேகம் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments