சென்னையில் திமுக பிரமுகர் செல்வம் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு.. கூலிப்படையை ஏவி கொலை செய்த 4 பேர் கைது.!

சென்னையில் திமுக பிரமுகர் செல்வம் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் ஒருவர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணயில் மடிப்பாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் போட்டியால் ஏற்பட்ட பகை காரணமாக கூலிப்படையினரை வைத்து செல்வத்தை தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் சென்ற வாரம் முத்து சரவணன் என்ற கூலிப்படை தலைவன் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது , வேளச்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர எழுத்தாளராக உள்ள ஜெயமுருகன் , மடிப்பாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் உமாமகேஸ்வரன், சகாய டென்ஸி மற்றும் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments