சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 2 வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம்.!

0 1730

சென்னை அண்ணா சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க 2 வழித்தடங்களில் சோதனை முறையில் செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றங்கள், தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

அதன் படி, மவுண்ட் ரோட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள், LIC கட்டிடம் அருகே உள்ள திரு.வி.க சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.

மேலும் ஜெமினி மேம்பாலம் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து ஓமந்தூரர் மருத்துவமனை நோக்கி வரும் வாகனங்கள் தேவி திரையரங்கம் வழியாக செல்லாமல், டேம்ஸ் சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments