நிலக்கரி ஏற்றி செல்லும் சரக்கு ரயில்களை கூடுதலாக இயக்க நடவடிக்கை.!

நிலக்கரி ஏற்றி செல்லும் சரக்கு ரயில்களை கூடுதலாக இயக்கும் வகையில் 42 பயணிகள் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில், மின் உற்பத்தி நிலையங்களுக்கு அதிகளவில் நிலக்கரி தேவைப்படுவதை கருத்தில் கொண்டு ரயில்வேத்துறை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே சார்பில் நாள்தோறும் நிலக்கரிகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை 400க்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
Comments