தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் தமிழ்நாட்டில் உயிர்க்கொல்லியான எலிபேஸ்ட் விற்பனைக்குத் தடை.!

0 3070

தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய சிறப்பு கவனத் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் விற்கும் உணவகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்து 18 கோடி ரூபாய் மதிப்பில், தாம்பரம், பழனி உள்ளிட்ட 19 அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் தமிழகத்தில் கூடுதலாக ஆயிரத்து 450 மருத்துவ மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments