பெரம்பலூரில் நீதிமன்ற வாசலில் வைத்து மனைவியை கத்தியால் குத்திய கணவர்.!

0 3247

பெரம்பலூரில் விவாகரத்து வழக்கில் ஆஜராக நீதிமன்றத்துக்கு வந்த மனைவியை அவரது கணவர் மறைந்திருந்து கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடியைச் சேர்ந்தவர்கள் காமராஜ் - சுதா தம்பதி. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த வேறொருவருடன் சுதாவுக்கு தவறான தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் தம்பதி பிரிய முடிவெடுத்து, விவாகரத்து வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக இன்று பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு அரசு பேருந்தில், வந்திறங்கிய சுதாவை அவரது கணவர் காமராஜ் மறைந்திருந்து கத்தியால் சரமாரியாகக் குத்தினார். இதில் சுதாவுக்கு முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

தாக்குதலைத் தடுக்க முயன்ற அழகேசன் என்ற காவலருக்கும் காயம் ஏற்பட்டது. அப்போது நடந்த போராட்டத்தில் காமராஜுவுக்கும் கையில் காயம் ஏற்பட்டது. மூவருமே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments