முகநூல் விளம்பரம் மூலம் செல்போன் விற்பனை மோசடி.. கரூர் இளைஞரை மிரட்டி ரூ.7 லட்சம் பணம் பறிப்பு..!

0 5285
முகநூல் விளம்பரம் மூலம் செல்போன் விற்பனை மோசடி.. கரூர் இளைஞரை மிரட்டி ரூ.7 லட்சம் பணம் பறிப்பு..!

கரூரில் முக நூல் விளம்பரம் மூலம் செல்போன் வாங்க ஆர்டர் செய்த இளைஞரை மிரட்டி 7 லட்சம் ரூபாய் பறித்த வடமாநில இளைஞர்கள் 2பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓமன் நாட்டில் கரூரை சார்ந்த இளைஞர் ஒருவர் வேலை பார்த்த போது முகநூலில் வந்த ஆண்ட்ராய்டு செல்போன் விற்பனை விளம்பரத்தை பார்த்து அதனை வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அந்த செல்போனை வாங்க ஆர்டர் செய்த கரூர் இளைஞர் முதலில்  திரிபுராவைச் சேர்ந்த சஞ்சய் என்பவரது வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தியுள்ளார்.

பின்னர் ஓமனில் இருந்த கரூருக்கு திரும்பிய இளைஞருக்கு சொன்னபடி செல்போன் வராததால் விளம்பரத்தில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது பணத்தை தர மறுத்ததுடன் மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் கரூர் இளைஞரின் முகநூல் பக்கத்தில் இருந்து தகவல்களை எடுத்து அதன் மூலம் அவரை தொடர்ந்து மிரட்டி 7 லட்சத்து ஆயிரத்து 900ரூபாயும் பறிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments