ஆப்கானில் 2 இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பு… 9பேர் உயிரிழப்பு- 13பேர் படுகாயம்

0 3473

ஆப்கானிஸ்தானின் Balkh மாகாணத்தில் நடைபெற்ற இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மசார்-இ-ஷரீப் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஊடகங்களில் வெளியான தகவலின்படி இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் பொது போக்குவரத்தை இலக்காகக் கொண்டிருந்தன என்று கூறப்படுகிறது. 

இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாகாண சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதனிடையே இந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்வத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments