ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.59 லட்சம் பணமோசடி.. மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

0 2449
ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.59 லட்சம் பணமோசடி.. மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

புதுச்சேரி ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 59 லட்சம் ரூபாய் வரை பணமோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் தனது நண்பரான செல்வம் என்பவரிடம், அவர் மகனின் வேலையின்மை குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஜிப்மர் மருத்துவமனை இயக்குனரின் உதவியாளராக பணிபுரியும் மணிகண்டன் தனது நண்பர் எனக் கூறி செல்வம் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஜிப்மரில் வேலை வாங்கி வாங்கி தருவதாக கூறி பிரபாகரனிடம் இருந்து பல்வேறு தவணைகளில் 59 லட்சம் ரூபாய் வரை மணிகண்டன் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கூறியபடி வேலை வாங்கி தரமால், போலியான பணி நியமன ஆணை வழங்கி பணிக்கு தற்போது செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளார். மணிகண்டன் கொடுத்த ஆவணம் போலியானது என தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments