காஷ்மீரில் இருந்து தமிழக டிஜிபிக்கு ராணுவ வீரர் வேண்டுகோள்..! என் மனைவி தாலியை பறிச்சுட்டாங்க..!

0 34515
காஷ்மீரில் இருந்து தமிழக டிஜிபிக்கு ராணுவ வீரர் வேண்டுகோள்..! என் மனைவி தாலியை பறிச்சுட்டாங்க..!

சொந்த ஊரில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தில் இருந்து தாலி சங்கிலியை கொள்ளையன் பறித்துச்சென்றுவிட்டதாகவும், தங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் காஷ்மீரில் இருந்து திருச்சியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் தமிழக டி.ஜி.பிக்கு வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளார்.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த பேரூர் குடித்துறை கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம், இவர் கடந்த 12 வருடமாக காஷ்மீரில் துணை ராணுவப்படையில் பணியாற்றி வருகின்றார்.

28ந்தேதி மதியம் இவரது மனைவி தனது 10 மாத பெண் குழந்தையுடன் வீட்டில் படுத்து உறங்கிய போது, அவரது கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை மர்ம ஆசாமி பறித்துச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்து, தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் , தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆகியோருக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு, திருச்சியில் உள்ள சி.ஆர்.பி.எஃப் வீரர் நீலமேகத்தின் மனைவி கலைவாணியை தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு ஆறுதல் கூறியதுடன்,  நகையை பறித்துச் சென்றவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments