பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து.. கடை முற்றிலும் எரிந்திருந்ததை பார்த்ததும் மயங்கி விழுந்த உரிமையாளர்..

சென்னை ஆதம்பாக்கம் பேக்கரி கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு கடை முற்றிலுமாக எரிந்து நாசமான நிலையில் அதை பார்த்த உரிமையாளர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதான சாலையோரம் அமைந்துள்ள அந்த கடையின் உரிமையாளர் அகஸ்டின், மதியம் கடையை மூடிவிட்டு உணவு அருந்தச் சென்றுள்ளார். அவர் சென்ற சிறிது நேரத்தில் கடையிலிருந்து புகை கிளம்பி தீப்பிடித்து எரிந்துள்ளது.
அக்கம்பக்கத்தினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்த போது கடைக்கு வந்த உரிமையாளர் அகஸ்டின் அப்படியே மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மரத்தால் உள்வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் கடை முற்றிலும் எரிந்து நாசமானதையடுத்து பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சமோசா, பப்ஸை சூடாக வைத்திருக்கும் வார்ம்பாக்ஸில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடிக்கத் தொடங்கியதாக பக்கத்து கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments