பிரபல நடிகர் சலீம் கெளஸ் உடல்நலக் குறைவால் காலமானார்.!

0 8466

பிரபல வில்லன் நடிகர் சலீம் கெளஸ் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 70.

நாடகக் கலைஞராக நடிப்பைத் தொடங்கிய சலீம் அகமது கௌஸ், நாடக இயக்குநராகவும் செயல்பட்டு வந்தார். 1989 ஆம் ஆண்டு தமிழில் பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளியான வெற்றி விழா படத்தில் வில்லனாக அறிமுகமான சலீம் கெளஸ், சின்ன கவுண்டர், திருடா திருடா, சாணக்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் வேதநாயகம் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சலீம் கெளஸ்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments