மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி செய்த திமுக பிரமுகர்..

0 2692
மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரைச் சேர்ந்த வி.சி.ஆர். குமரன், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவரின் மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் மருத்துவ சீட் வாங்கிதராமல், கொடுத்த பணத்தையும் திருப்பித்தராமல் வி.சி.ஆர். குமரன் ஏமாற்றியதாக நவநீதகிருஷ்ணன் ஆன்லைன் வாயிலாக புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் வி.சி.ஆர். குமரன் மீது திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments