உடல்நலக்குறைவால் உயிரிழந்த தாய்க்கு கோவில் கட்டி சிலை வைத்து வழிபடும் மகன்கள்.!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உடல்நலக்குறைவால் உயிரிழந்த தாயாருக்கு அவரது மகன்கள் கோவில் கட்டியுள்ளனர்.
நாவல்பட்டி காட்டூர் கிராமத்தில் வக்கீலாக பணியாற்றி வரும் முருகேசன் என்பவரது தாயார் அலமேலு கடந்த 2019-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
அவரது நினைவாக முருகேசனும், அவரது தம்பி பச்சைமுத்துவும் இணைந்து தங்கள் தோட்டத்தின் ஒரு பகுதியில் கருங்கற்களால் கோவில் கட்டியெழுப்பி கருவறையில் இரண்டே முக்கால் அடி உயரத்திற்கு தாயின் சிலையை நிறுவி தினமும் பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.
Comments