தொடர் கொள்ளையில் தொடர்புடைய இருவர் கைது.. பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளிக்கு வலைவீச்சு

0 2279
தொடர் கொள்ளையில் தொடர்புடைய இருவர் கைது.. பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளிக்கு வலைவீச்சு

சென்னை கொடுங்கையூரில் தொடர் திருட்டு சம்பவங்களில் சம்மந்தப்பட்ட இருவரை கைது செய்த போலீசார் அதில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளி ஒருவனை தேடி வருகின்றனர்.

கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியில் அண்மையில் நடந்த இரு திருட்டு சம்பவங்களில் 32 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் ஒரு ஆண் ஒரு பெண் இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீட்டை நோட்டமிட்டு செல்வது தெரியவந்தது.

அதில் இருந்த நபர் பிரபல கொள்ளையன் மறைந்த திருவாரூர் முருகனின் கூட்டாளி தினகரன் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், தினகரனின் மனைவி உஷா மற்றும் கூட்டாளி மோகனை கைது செய்து அவர்களிடம் இருந்து 40 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள தினகரனை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments