சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட விவகாரம் குறித்து விசாரணை!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் நரம்பியல் சிகிச்சை பிரிவு இயங்கிய கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் தீ விபத்துக்கான பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்து நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், இதுகுறித்து மருத்துவமனை டீன் தேரணிராஜன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இதனிடையே, தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள், கணினி உள்ளிட்டவை மருத்துவ கண்காணிப்பாளர் தலைமையில் வெளியே எடுக்கப்பட்டது. அவற்றை தடயவியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.
Comments