சிமெண்ட் தொழிற்சாலையின் அதிகாரத்தை கைப்பற்ற சண்டை.. இரு தரப்பினரிடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழப்பு

0 2415
சிமெண்ட் தொழிற்சாலையின் அதிகாரத்தை கைப்பற்ற சண்டை.. இரு தரப்பினரிடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் சிமெண்ட் தொழிற்சாலையின் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி மோதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

துலா நகரில் உள்ள கிரஸ் அசூல் சிமெண்ட் தொழிற்சாலையின் அதிகாரத்தை கைப்பற்றும் போட்டி இரு தரப்பினருக்கு இடையே நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்கினர்.

சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். சம்பவம் குறித்து 9 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments