இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி எதிரொலி...மேலும் இரு அகதிகள் தமிழகம் வருகை!

0 1531

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து மேலும் இருவர் அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் புதுக்குடி கடற்கரையில் இலங்கையில் இருந்து படகு மூலம் இரண்டு பேர் வந்து இருப்பதாக போலீசாருக்கு கிடைத்தது.

அதன்பேரில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்ததையடுத்து, தொண்டி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இருந்து கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் தற்போது வரை 75 பேர் அகதிகளாக வந்துள்ள நிலையில் அனைவரும் விசாரணைக்கு பிறகு மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments