சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ விபத்து.. காரில் இருந்தவர் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்ப்பு

0 2159
சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ விபத்து.. காரில் இருந்தவர் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்ப்பு

ஊட்டி அருகே கோத்தகிரி-மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

கோத்தகிரியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி ஓட்டுநர் உட்பட 3 பேருடன் சாலையில் சென்று கொண்டிருந்த கார், கைத்தளா அருகே திடீரென்று காரின் பானட் பகுதியில் புகை வந்து, மளமளவென தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரிந்தது.

உடனடியாக காரில் இருந்தவர்கள் கீழே இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments