காசியாபாத்தில் கல்லூரி லிப்ட் சரிந்து விபத்து: 10 மாணவர்கள் காயம்

0 1869

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்-ல் உள்ள தனியார் கல்லூரியில் லிப்ட் சரிந்து விழுந்ததில் 10 மாணவர்கள் காயமடைந்தனர்.

Dasna நகரில் உள்ள ஐ.எம்.எஸ் கல்லூரியின் ஐந்தாவது மாடியின் லிப்ட் கேபிள் அறுந்து சரிந்து விழுந்தது. காயமடைந்த மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த 10 மாணவர்களில் 4 பேருக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், அதிக அளவிலான எண்ணிக்கையில் லிப்டில் பயணித்ததே விபத்திற்கான காரணம் என தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments