நடிகர் அஜய் தேவகனுக்கும் கன்னட நடிகர்களுக்கும் இடையே கடும் சொற்போர்... காரணம்?

0 6159

இந்தி தேசிய மொழியா இல்லையா என்பது குறித்து நடிகர் அஜய் தேவகனுக்கும் கன்னட நடிகர்களுக்கும் இடையே கடும் சொற்போர் மூண்டுள்ளது. இந்தி தேசிய மொழி என்று அஜய் தேவ்கன் கூறிய கருத்துக்கு நடிகர் கிச்சா சுதீப் பதிலளித்தார்.

பெங்களூர் திரைப்பட விழாவில் பேசிய சுதீப், இந்தி இன்று தேசிய மொழி அல்ல ..நான் கன்னடத்தில் எழுதினால் உங்களுக்குப் புரியுமா என்றும் கேள்வி எழுப்பினார். இதனைக் குறிப்பிட்ட போது  பலத்த கரவொலி எழுந்தது.  சுதீப்பை டிவிட்டரில் டேக் செய்து அஜய் தேவகன் பதிலளித்ததில், உங்கள் படங்களை வர்த்தக நோக்கில் ஏன் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

உடனே திரும்பவும் பதிலளித்த சுதீப், இந்தி உள்பட அனைத்து இந்திய மொழிகளையும் தாம் சம அளவில் மதிப்பதாகக் கூறியுள்ளார். இதனிடையே காங்கிரஸ் கட்சியின் ஐடி பிரிவு தலைவியான நடிகை ரம்யாவும் அஜய் தேவகன் இந்திப்பாடத்தை திணிப்பதை நிறுத்துமாறு கண்டித்துள்ளார். அஜய் தேவகனுக்கு விவரம் போதாது என்றும் ரம்யா குறிப்பிட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments