கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.. முகக்கவசம் அணியாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை

கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.. முகக்கவசம் அணியாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை
கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் வி.பி.ஜாய் விடுத்துள்ள அறிக்கையில், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மாநிலத்தின் அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் பணியிடங்கள் மற்றும் போக்குவரத்தின் போதும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் வி.பி. ஜாய் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments