போர் எதிரொலி: உக்ரைன் - ரஷ்யா நட்பைக் குறிக்கும் நினைவுச்சின்னம் அகற்றம்!

0 2165

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான நட்பைக் குறிக்கும் வகையில், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் அமைக்கப்பட்டிருந்த சோவியத் கால நினைவுச் சின்னம் அகற்றப்பட்டது.

சோவியத் யூனியனின் 60வது ஆண்டு விழாவை நினைவு கூரும் வகையில் கடந்த 1982ம் ஆண்டு ஆண்டு People`s Friendship Arch என்றழைக்கப்படும் வானவில் வடிவிலான நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.

அதற்கு அருகிலேயே, சுமார் 27 அடி உயரத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்ய தொழிலாளி ஒரு பீடத்தில் ஒன்றாக இணைந்து நிற்பது போன்ற சிலையும் நிறுவப்பட்டது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த நினைவுச் சின்னம் அகற்றப்படுவதாக கீவ் மேயர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments