உக்ரைன் நாட்டின் ஆயுத கிடங்கை தகர்த்தது ரஷ்யா..!

0 2757

உக்ரைனுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு அழிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் நேச நாடுகள், உக்ரைனுக்கு உதவுவதற்காக ஏராளமான டிரோன் விமானங்கள், விமான எதிர்ப்பு மற்றும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கி வந்தன. சப்போர்ஷியா நகரில், விமானங்கள் நிறுத்தப் பயன்படுத்தப்பட்ட பெரிய கட்டிடத்தில் அவை வைக்கப்பட்டிருந்தன.

செவ்வாய் இரவு, உக்ரைன் நாட்டின் 59 ராணுவ நிலைகள் மீது ரஷ்ய படைகள் கலிபிர் (Kalibr) ரக ஏவுகணைகளை வீசி நிகழ்த்திய தாக்குதலில் சப்போர்ஷியா நகரில் இருந்த அந்த ஆயுத கிடங்கும் அழிக்கப்பட்டதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments