திமுக பிரமுகர் கொடூரமாக வெட்டிக் கொலை...தப்பியோடிய கொலையாளிகள் இருவருக்கு போலீசார் வலைவீச்சு!

0 1846

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நடைபயிற்சி சென்ற திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முன்விரோதம் காரணமாக அவரது பங்காளிகளாலேயே வெட்டிக் கொல்லப்பட்டார்.

கன்னியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த திமுக மாவட்ட பிரதிநிதியும், கோணசமுத்திரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான கந்தன் காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கந்தனின் பங்காளிகளான மணிகண்டன், சின்னபையன்  ஆகியோர், அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

ஆபத்தான முறையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கந்தன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கந்தனுக்குச் சொந்தமான வயலைக் கடந்துதான் அவரது பங்காளியான மணிகண்டனின் வயலுக்குச் செல்ல முடியும். அதற்கு கந்தன் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படு நிலையில், இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த முன்விரோதத்தில், இந்தக் கொலை அரங்கேறி இருப்பதாகக் கூறும் போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments