உலக நாடுகளுக்கு இந்தியா 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளது - பிரதமர் பெருமிதம்!

0 1344

உலக நாடுகளுக்கு இந்தியா பத்துக் கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குக் கிழக்கே உள்ள தீவுநாடான பிஜியில் சாய்பாபா அறக்கட்டளை உதவியுடன் கட்டப்பட்ட ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

இதையொட்டிப் பிரதமர் மோடி வீடியோவில் வெளியிட்டுள்ள உரையில், இரு நாடுகளுக்கு இடையில் உள்ள நட்புறவின் அடையாளமாக இந்த மருத்துவமனை திகழ்வதாகத் தெரிவித்தார்.

பிஜியில் மட்டுமல்லாமல் தென்பசிபிக் மண்டலத்திலேயே உள்ள சிறார்களுக்கான இதய மருத்துவமனை இது ஒன்றுதான் எனத் தெரிவித்தார்.

ஆன்மீகத்தைச் சடங்குகளில் இருந்து விடுவித்து மக்கள்நலப் பணியுடன் இணைத்தவர் சத்ய சாய் பாபா எனப் பிரதமர் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments