ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, நாகர்கோவில் டிஎஸ்பி நவீன்குமார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
மாவட்டம் முழுவதும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்தும் விதமாக காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.
Comments