தாம்பரம் - செங்கல்பட்டு வரை உயர்மட்ட பாலம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தகவல்

0 8364

போக்குவரத்து நெரிசலை குறைக்க தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட பாலம் அமைக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் திருச்செங்கோடு எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் போதும், மீண்டும் ஊரில் இருந்து சென்னைக்கு திரும்பும் போது, தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறியதோடு, இதனை தடுக்க உயர்மட்ட பாலம் அமைக்குமாறு திட்ட அறிக்கை தயார் செய்து கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். 

அதே போல பூவிருந்தவல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments