கோயம்பேடு சந்தையில் செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட 7.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

0 1846

சென்னை கோயம்பேடு சந்தையில் திடீர் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 7 அரை டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.

ஆந்திரா, சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து காயாக கொண்டு வரப்பட்ட மாம்பழங்கள் மற்றும் அவகேடோ பழங்கள் எத்திலின் ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து 7 அரை டன் மாம்பழம் மற்றும் 900 கிலோ அவகேடோ பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு  5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments