தஞ்சை தேர் திருவிழாவின் போது மின் விபத்தில் இறந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

0 2808
தஞ்சை தேர் திருவிழாவின் போது மின் விபத்தில் இறந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

தஞ்சை அருகே தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட மின் விபத்தில் இறந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டதை அடுத்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சையில் தேர் திருவிழாவின் போது எதிர்பாராதவிதமாக தேர் உயரழுத்த மின்கம்பியில் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments