அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

0 1834

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4  நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நெல்லை, குமரி, ஈரோடு, கரூர், தருமபுரி, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் என பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

27-ந் தேதியும் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments