50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி!

0 2443

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரம் மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா நிறுவுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

எரிசக்தித்துறை மானிய கோரிக்கையில் புதிய அறிவிப்புகள் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது.

மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் சாலையோரம் உள்ள துணை மின் நிலையங்களில் நிறுவப்படும் என்றும், டான்ஜெட்கோவின் பழைய காற்றாலைகளை மாற்றி புதிய காற்றாலை மற்றும் சூரிய சக்தியுடன் இணைந்த மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

டாஸ்மாக் சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அறிவிப்புகளின்போது செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments