துருக்கியில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து - 2 பேர் பலி!

0 2122

துருக்கியில் ஒற்றை இன்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

புர்சா நகரில் உள்ள யுனுசெலி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு பேர் மட்டும் அமரும் வசதிகொண்ட அந்த விமானம், பக்லார்பசி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

குடியிருப்பு பகுதியில் விமானம் வெடித்து சிதறும் சிசிடிவியில் பதிவான காட்சி வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் விமானம் விழுந்த வீட்டில் இருந்த பெண் தக்க சமயத்தில் தன் குழந்தையுடன் வெளியேறியதால் உயிர்தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments