தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, குமரி, ஈரோடு, கரூர், தருமபுரி, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் என பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. 27-ந் தேதியும் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை எனவும், வானம் மேகமூட்டத்துடன் மட்டும் காணப்படும் எனவும் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 2 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Comments